2 கொரிந்தியர்;
1:3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின்
தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்
2 கொரிந்தியர்;
1:4 தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத்
திராணியுள்ளவர்களாகும்படி,
எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும்
அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவா;.
2 கொரிந்தியர்;
7:6 ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறதல் செய்கிற தேவன்
தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார்.
சங்கீதம்
94:19 என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
சங்கீதம்
119:50 அதுவே என் சிறுமையில் எனக்கு
ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.
ஏசாயா
57:18 அவர்கள் வழிகளை நான் பார்த்து,
அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும்
அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்.
ரோமா;
15:6 பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய
மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவா;களாயிருக்கும்படி
உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக
எபிரெயா;
6:18 நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப்
பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய்
ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத
விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத
தேவன் அப்படிச் செய்தார்.
No comments:
Post a Comment