சாஸ்திரிகள் கண்டநட்சத்திரத்தை குறித்து மத்தேயு 2 –ம் அதிகாரத்தில் காண்கிறோம்.
இதே கால கட்டத்தில் வாழ்ந்த
சீன (China) வானசாஸ்திரிகள் அப்படி ஒரு நட்சத்திரத்தை
கண்டதாக குறிப்பு எழுதி வைத்துள்ளதை, சமீபத்தில்
கண்டு பிடித்துள்ளனர்.
வேதத்திலே ஆபிரகாம்
தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது.
(2 நாளா 20:7, ஏசா 41:8, யாத் 2:23
கலகம் செய்பவர்களுக்கு
மட்டுமே சிலுவை மரணம் கொடுத்தனர்
ரோமர் குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.
நான்கு சுவிசேஷங்களிலும்
முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.
இயேசு கிறிஸ்துவின்
உவமைகள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் வேதத்திலே மிக
பழமையான மற்றும் முதலாவதாக வரும்
உவமை நியாய 9:8-15-ல் உள்ள உவமையாகும்.
தேவன் மனுஷனிடம்
கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே
இருக்கிறாய்?” ஆதி 3:9.
யோர்தான் நதியினுடைய
மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.
“தேவன்” என்கிற வார்த்தை எஸ்தர்
மற்றும் உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களில் கிடையாது.
தந்தி முறையை
(Telegraph) கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் முதல் முதல்
அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா? “What hath God wrought?” Num 23:23 அதாவது “தேவன் என்னென்ன
செய்தார்?” எண் 23:23.
மோசே குழந்தையாக
இடப்பட்ட நைல் நதியின் மொத்த
நீளம் 3218.6 கி.மீ ஆகும்.
இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.
ஏதேனிலிருந்து வரும்
நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (தற்போதைய
பெயர் யூப்பிரடிஸ்) என்னும் நதியின் மொத்த
நீளம் 2880 கி.மீ.
ஏதேனிலிருந்து வரும்
நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” என்னும் நதியின் நீளம்
1844.2 கி.மீ.
யோர்தான் நதி
3 முறை இரண்டாக பிரிந்தது
1. யோசு 4:7,19.
2. 2 இரா 2:8.
3. 2 இரா 2:13,14.
வேதத்திலே சொல்லப்பட்டுள்ள
மலைகளில் மிக் உயரமான மலை
அரராத் மலை. இதன் உயரம்
5260.8 மீட்டர் ஆகும்.
No comments:
Post a Comment