தள்ளப்பட்ட வேதம்
(Appocrypha) எனப்படுவது யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, கிரேக்க மொழியில் ஏழுதப்பட்ட
7 ஆகமங்கள் (புத்தகங்கள்) ஆகும். கத்தோலிக்க வேதத்தில்
இதனை இணைத்துள்ளனர்.
சீகன் பால்கு
ஐயர் அவர்கள் மரித்தப்பின் அவர்
விட்டு சென்ற பழைய ஏற்பாட்டின்
ஒரு சில ஆகமங்களை பெஞ்சமின்
ஸ்கல்ட்ஸ் என்பவர் மொழிப்பெயர்த்து முடித்தார்.
சீகன் பால்கு
ஐயர் தமிழ்நாட்டில் உள்ள தரங்கம்பாடியில் தன்
ஊழியங்களை செய்து, ஒரு சபையை
கட்டியுள்ளார். அத்திருச்சபையில் இன்றும் ஆராதனை நடக்கிறது.
ஜெர்மனியிலிருந்து வந்த
மிஷினரியான சீகன் பால்கு ஐயர்
என்பவர் தான் தமிழ் மொழியில்
வேதத்தை மொழிப்பெயர்த்தவர்.
2 இராஜாக்கள் 19-ம்
அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே
சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும்
கொண்டுள்ளது.
இயேசுவின் பிறப்பில்
பரிசுகள் கொண்டு வந்த மூன்று
சாஸ்திரிகளின் பெயர்கள்.
1. மெல்கொயர் – பரிசு பொன்.
2. காஸ்பர் – பரிசு வெள்ளை போளம்.
3. பால்தாஜர் – தூபவர்க்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
வேத பண்டிதர்கள்
இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள் பெயர்கள்..
1. திஸ்மாஸ்
2. கெஸ்டாஸ் என்று
கண்டு பிடித்துள்ளனர்.
வேதத்திலே நான்கு
விதமான பிறப்பு உள்ளது .
1. மண்ணிலிருந்து ஆதாம்.
2. எலும்பிலிருந்து ஏவாள்.
3. தகப்பனும் தாயும் சேர்ந்து பிள்ளைகள்.
4. கன்னியின் மூலமாய் இயேசு கிறிஸ்து.
மாற் 14:51,52-ல்
துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அந்நூலின்
ஆசிரியரான மாற்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.
No comments:
Post a Comment