Wednesday, 11 November 2015

மகா பாபிலோன்

மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ளஅருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில்எழுதியிருந்தது. - (வெளிப்படுத்தின விசேஷம் 17:5).
babylon

.
வேதத்தில் அதிகமாக சொல்லப்பட்டிருக்கும் நாடு எது தெரியுமா? ஆம், இஸ்ரவேல் தேசத்தை குறித்து தான். அதற்கு அடுத்தபடி சொல்லப்பட்டிருக்கிற நாடு எது என்றால் அது
ஈராக் தேசம் தான். ஈராக் தேசத்தை குறித்து, அநேக இடங்களில் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை அதிகமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஈராக் தேசம் ஈரான் தேசத்தோடு ஒன்பது வருடங்கள் போரிட்டு, தாக்குபிடிக்க முடிந்தது. அதை ஆண்ட சதாம் ஹூசைன் அந்த ஒன்பது ஆண்டுகளும் விடாமல் போரிட்டு, கடைசி வரை யார் ஜெயித்தார்கள் என்றே சொல்ல முடியாதபடி அந்த போர் முடிந்தது. அது முடிந்த உடனே, ஈராக் தேசம் மிகவும் சிறிய அண்டை நாடான குவைத்தை பிடித்து ஆக்கிரமித்தது, அதன்பின் குவைத் தேசததின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, அமெரிக்க படைகள் வந்து, அதை மீட்டு கொடுத்தது. இன்னும் அமெரிக்க படைகள் குவைத்தை பாதுகாத்து வருகின்றது.

அதன்பின் சதாம் ஹூசைன் நீதி விசாரிக்கப்பட்டு, தூக்கில் போடப்பட்டது நாம் யாவரும் அறிந்ததே. இந்த நாளில் இந்த ஈராக் தேசத்தை குறித்து, அதன் விசேஷங்களை குறித்து நாம் பார்க்க போகிறோம். வேதத்தில் காணப்படும் அசீரியர்கள், கல்தேயர்கள், மெசபொடோமியா, பாபிலோன் இவை யாவும் பண்டைய ஈராக் நாட்டினையே குறிக்கின்றன.
.
ஏதேன் தோட்டம் ஈராக்கிலே இருந்தது.

மெசபொடோமியா என்று அழைக்கப்பட்ட ஈராக் தேசத்திலே தான் நாகரீகம் தோன்றியது.

நோவா பேழையை ஈராக்கிலேதான் கட்டினார். நோவா எந்த இடத்தில் பேழையை கட்டினார் என்பது வேதத்தில் குறிப்பிடாவிட்டாலும், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஈராக்கில் தான் கட்டியிருக்க கூடும் என்று நம்புகின்றனர்.
பாபேல் கோபுரம் ஈராக் தேசத்தில் தான் கட்டப்பட்டது.

ஆபிரகாம் இருந்த கல்தேயரின் ஊரான ஊர் ஈராக்கில் தான் இருந்தது.

ஈசாக்கின் மனைவி ரெபேக்காளின் ஊராகிய நாகோர் ஈராக்கில்தான் இருந்தது.

யாக்கோபு ராகேலை சந்தித்தது ஈராக்கில்தான்.

யோனா பிரசங்கம் செய்த நினிவே ஈராக்கில்தான் இருந்தது.

இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களை ஜெயித்த அசீரியா ஈராக்கில் தான் இருந்தது.

ஆமோஸ் தீர்க்கதரிசி ஈராக்கில் தான் தீர்க்கதரிசனம் கூறினார்.

ஈராக்கில் இருந்த பாபிலோன் எருசலேமை அழித்தது.

பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சார் யூத வாலிபர்களை அடிமைகளாக கொண்டு சென்றது இந்த ஈராக்கில்தான்.

தானியேல் தீர்க்கதரிசி இருந்த சிங்க கெபி ஈராக்கில்தான் இருந்தது.

சாத்ராக் மேஷாக் ஆபெத்நேகோ என்னும் எபிரேய வாலிபர்கள் ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட சூளையில் தூக்கி வீசப்பட்டதும் இந்த ஈராக்கில் தான்

அதில் நான்காவது நபராக இயேசுகிறிஸ்து வந்து உலாவினதும் இந்த ஈராக்கில்தான்.

எசேக்கியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொன்னது இந்த ஈராக்கில்தான்.
பேதுரு சுவிசேஷத்தை ஈராக்கில் பிரசங்கித்தார்.

ஏதேன் தோட்டம் ஈராக்கில் இருந்ததுஆதியாகமம் 2:10-14

ஆதாமும்ஏவாளும் உருவாக்கப்பட்டது ஈராக்கில்ஆதியாகமம்2:7-8

சாத்தான் தன்னை முதலில் வெளிப்படுத்தினது ஈராக்கில் ஆதியாகமம் 3:1-6

நிம்ரோத் பாபேல் கோபுரத்தை கட்டியது ஈராக்கில்ஆதியாகமம் 10:8-911:1-4

பாஷைகள் தாறுமாறாக்கப்பட்டது ஈராக்கில் ஆதியாகமம் 11:5-11

யாக்கோபு 20 வருடங்களை ராகேலுக்காக கழித்தது ஈராக்கில் ஆதியாகமம் 27:42-45

முதன்முதல் ராஜாங்கம் ஈராக்கிலே அமைக்கப்பட்டது தானியேல் 1:1-2, 2:36-38

எஸ்தர் புத்தகத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஈராக் தேசத்திலே நடந்தது

நாகூம் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தது ஈராக் தேசத்தை குறித்து தான்

வெளிப்படுத்தின விசேஷத்தின் பாபிலோனிய தேசம் இப்போதிருக்கும் ஈராக் ஆகும்.
.
இப்படி சரித்திர புகழ் பெற்ற ஈராக் தேசம் வேதத்தில் இஸ்ரவேல் தேசத்திற்கு அடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ஈராக் தேசத்தில் சதாம் ஹூசைனின் மறைவுக்குப்பின் எப்போது பார்த்தாலும் குண்டு வெடிப்புகளும், தீவிர வாத செய்கைகளும் அதிகமாக காணப்படுகிறது. இந்த தேசத்தின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போமா? இந்த தேசத்தில் சமாதானம் நிலவும்படியாக ஜெபிப்போமா? இங்குள்ள கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போமா?

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும் ஈராக் தேசத்திற்காக நாங்கள் ஜெபிக்கிறோம் ஐயா. ஆதிபிதாக்களின் காலத்திலிருந்து, வெளிப்படுத்தின விசேஷம் வரை சரித்திர புகழ் பெற்ற ஈராக் தேசத்தில் இந்த நாட்களில் அநேக ஜனங்கள் குண்டு வெடிப்பிலும், தீவிரவாதத்தினாலும் மரித்து கொண்டிருக்கிறார்களே, தகப்பனே, இந்த தேசத்தில் அமைதியை தருவீராக. சமாதானத்தை தருவீராக. அங்கு வாழும் கிறிஸ்தவர்கள் பயமின்றி வாழத்தக்கதாக அவர்களுக்கு பாதுகாப்பை கொடுத்தருளும். அந்த தேசம் எப்படியாவது கிறிஸ்துவை அறிந்து இரட்சிக்கப்பட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.






நன்றி:ananthanadarkudycsichurch

No comments:

Post a Comment