Monday, 18 May 2015

பண்டைய கால ஆதாரங்கள் - பரிசுத்த வேதாகமம்


பரிசுத்த வேதாகமம் இறைவனின் வார்த்தையே என்று நிருபிக்கும் பதிவு


 சிரியா தேசத்தில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய கால ஆதாரங்கள்.

சுமார் 39 வருடங்கலுக்கு முன்பதாக பழங்கால புதையல் ஒன்று சில அகழ்வாராய்ச்சி குழுவால் கண்டெடுக்கப்பட்டது. சிரியா தேசம், Aleppo தமஸ்க்கு பட்டணம் வழியில் சரித்திரத்தால் மறைந்து போன ஓர் கிராமமே கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கண்டெடுக்கப்பட்ட களிமண் உருண்டைகள் கிறிஸ்தவ உலகையே ஆச்சரியப்படுத்தி விட்டது. இப்போது
உங்களையும் ஆச்சரியப்படுத்த போகிறது.... தொடர்ந்து படியுங்கள்...

இந்த புதையல் Professor Paolo Matthiae (ரோம பல்கலைக்கழகம்) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் 1964ல் ஆராய்ச்சியை ஆரம்பித்து பின் 1974-75ல் இந்த புதையலை கண்டுபிடித்தார். இது கிறிஸ்துவுக்கு முன் 2500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த எல்பா சாம்ராஜ்யத்தின் சரித்திர பதிவுகள் ஆகும். இங்கு எஸ்தர் என்ற தேவதையின் (There is a mound and a small village about one kilometer off the highway. Professor Paolo Matthiae of the Rome University has been excavating there since 1964, but his work was not spectacular until 1968 when his team produced a statue dedicated to the goddess Eshtar, and bearing the name of Ibbit-Lim, a king of Ebla. This endorsed the positive identification of the city. The kingdom of Ebla had previously been known in Sumerian, Akkadian and Egyptian texts) சிலை ஒன்று காணப்படுகிறது. அதின் கீழ் Ibbit-Lim என்று எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்பாவின் அடையாளம் நமக்கு தெரிய வருகிறது.

முதலாவதாக நாம் அறிய வேண்டியது, இந்த எஸ்தர் தேவதைக்கும் வேதாகமத்திற்கும் உள்ள தொடர்பு. எஸ்தர் மோசே க்கு பின் வந்தாதாக சரித்திரம் இருந்தாலும் எஸ்தர் என்ற பெயர் பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே இருந்த பெயர் ஆகும். அதாவது எஸ்தர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் 'நட்சத்திரம்' அல்லது 'நட்சத்திர தேவதை' என்று பொருள்படும். பாபிலோனியா/சுமேரியா/பெர்சியா போன்றவைகளில் எஸ்தர் என்ற வார்த்தை goddess Astara, Astar, Ishtar or Ashtar என்று வழங்கப்பட்டுள்ளது. ஜெர்மனிய மொழியில் Ostara என்று வழங்கப்படுகிறது. பாபிலோனிய வம்சத்தில் மூதேவியாக வர்ணிக்கப்படும் இந்த எஸ்தர் புனிதமான என் 666 ஆகும். இந்த என்னும் வேதாகமத்துடன் ஒத்துபோகிறது.
(http://gbgm-umc.org/umw/bible/timebce.stm, http://www.texemarrs.com/072005/prophecies_in_esther.htm)

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தகடுகளை சுமேரிய (Sumerian script) மொழியில் எழுதியிருக்கிறார்கள். இது எபிரேய மொழியுடன் ஒத்து போகிறது.

1975ம் ஆண்டு இரண்டு முக்கிய அறைகளில் சுமார் 15000 களிமண் சிறிய தகடுகள் கிடைத்தது. பின் 1976ம் ஆண்டு 1600 சிறிய தகடுகள் கிடைத்தது. ஒரு களிமண் தகட்டில் அப்போதைய மக்கள் தொகை 260,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓர் சிறிய தகட்டில் 260 புவி சார்ந்த பெயர்கள் உள்ளன. மற்றொரு தகட்டில் மிருகங்கள், பறவைகள், மீன்கள், வேலைகள், அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த களிமண் தகடுகள் கடைசி இரண்டு தலைமுறைகளை சார்ந்தவர்கள் எழுதியிருக்கவேண்டும் என்று கணித்திருக்கிறார்கள்.
இந்த களிமண் தட்டிற்க்கும் வேதாகமத்திற்கும் என்ன சமந்தம்? இதோ பதில்.....

இந்த எல்பா ராஜாங்கம் மோசே காலத்திற்கு 1000 வருடங்களுக்கு முன் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. வேதாகமத்தில் உள்ள முதல் 5 புத்தகங்களை மோசே எழுதினார் என்று நமக்கு தெரியும். இந்த புத்தகம் சரித்திரத்தை உள்ளடக்கியது. ஆதிகால சட்டங்கள், வாழ்க்கையை உள்ளடக்கியது. மோசே எழுதின முதல் 5 ஆகமங்களுக்கு முன் அதாவது 800 ஆண்டுகளுக்கு முன் இந்த களிமண் தகடுகள் எழுதப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த களிமண் தகடுகள் அக்காலத்தில் கொண்டிருந்த வாணிப முறைகள், சட்ட திட்டங்கள் என்று பலவற்றையும் உள்ளடக்கி உள்ளது. நம் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பழைய ஏற்பாட்டில் உள்ள வசனங்களை நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளது மிகப்பெரிய ஆச்சரியம். சில வசனங்கள் உங்கள் முன்...

1. உபாகமம் 22: 22-30 - கற்பழிப்பின் சட்டம்

இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது போல ஓர் பெண் கற்பழிக்கப்பட்டால் அவளை கற்பழித்தவன் கொல்லப்பட வேண்டும். அல்லது அவள் திருமணம் ஆகும் பருவத்தில் இருந்தால் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஓர் சட்டம் இருந்ததாக களிமண் தட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே மோசேயும் உபாகமம் 22ம் அதிகாரத்தில் முழுமையாக குறிப்பிட்டுள்ளார். இந்த களிமண் தட்டில் மூலம் மோசே எழுதியது ஓர் கதை அல்ல. அக்காலத்தில் நடந்து வந்த ஓர் உண்மை சம்பவம் என்று நிரூபணம் ஆகி உள்ளது.

2. வேதாகமத்தின் பெயர்கள்

பழைய ஏற்பாட்டில் உள்ள பல பெயர்கள் இந்த களிமண் தகட்டில் இடம் பெற்றுள்ளன.

1. Michael (mi-ka-ilu) இதற்க்கு அர்த்தம் "Who is like El?". எல்பா வார்த்தையில் mi-ka-ya என்று வரும் இந்த வார்த்தை நம் பரிசுத்த வேதாகமத்தில் பல முறை இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

2. மற்ற வார்த்தைகள் e-sa-um (Esau), da-'u-dum (David), sha-'u'-lum (Saul), and Ish-ma-ll (Ishmael). இந்த வார்த்தைகளையும் நீங்கள் வேதாகமத்த்தில் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக...

3. இதில் முக்கியமாக கடைசி வார்த்தையை பார்க்க வேண்டும். "II (El -- God) has heard me." என்று பொருள் படுகிறது.

4. சில முக்கியமான வார்த்தைகளை இங்கே உங்கள் முன் கொடுக்க கடமை பட்டுள்ளேன். கவனமாக படிக்கவும்...

En-na-ni-ll which gave over to En-na-ni-Ya (II/Ya has mercy on me என் மேல் கிருபையாய் இரும்);
A-dam-Malik (man of Milik);
'il-ha-il, II என்றால் strength / வலிமை ;
Eb-du-Ra-sa-ap, Servant of Rasaph அடிமை ;
Ish-a-bu, A man is the father தந்தை போன்றவர் ;
Ish-i-lum, A man is the god கடவுளை போன்றவர் ;
I-sa-Ya, Ya has gone forth முன்னே போகிறவர் ;
I-ad-Damu, The hand of Damu;
Ib-na-Malik, Milik has created

இந்த பெயர்களை குறித்து இதை கண்டுபிடித்த அகல்வராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியர் Pettinato அவர்கள் கூறுகையில் "இந்த பெயர்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள (எபிரேய மொழியில்) பெயர்களோடு ஒத்துபோகின்றன. எல்பா நாகரீகத்திற்கும் பழைய ஏற்பாட்டிற்கும் தொடர்பு இருப்பதை இதன் மூலம் அறியலாம்" என்று தன்னுடைய ஆய்வில் கூறி இருக்கிறார்.
"Many of these names occur in the same form in the Old Testament, so that a certain interdependence between the culture of Ebla and that of the Old Testament must be granted."

3. சங்கீதம் 23
எல்பாவின் காலத்தில் ஆன்மீகத்தின் அடையாளமாக சில களிமண் தகடுகள் எழுதப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக

"En-na-ni-Ya" அர்த்தம், "என் மேல் கிருபையாய் இரும்." Re-i-na-Adad," என்ற வார்த்தையில் உள்ள கடைசி வார்த்தை தேவனை ஓர் ஆட்டு மந்தையின் தலைவராக குறிப்பிடுகிறது. "Adad (a god) is our shepherd,
அடட் - கடவுள் என் மேய்ப்பராய் இருக்கிறார். இப்படிப்பட்ட வார்த்தைகள் பழைய ஏற்பாட்டின் காலத்தில் தேவனை குறித்த வெளிபாட்டை விளக்குவதாக உள்ளது. அது நம் வேதாகமத்தொடு ஒத்து போகிறது.

3. பரிசுத்தராம் பிதா மற்றும் இயேசுவை குறித்த வெளிப்பாடுகள்

நாம் முன்னர் பார்த்தது போல ஆட்டு மந்தையை மேய்ப்பவராக கடவுளை நேசித்துள்ளனர். அதை போல இயேசுவும் ஆட்டுகுட்டியானவராக நமக்காக அடிக்கப்பட்டார்.

நம்முடைய பிதாவாகிய தேவனின் பெயரை பழைய ஏற்பாட்டின் காலத்தில் "YAWEH" யாவெஹ் என்று அழைக்கிறோம்.

ஏசாயா அதிகாரத்தில் "I am the LORD; that is my name!" அதாவது நான் யாவே என்று எபிரேய பாஷையில் எழுதப்பட்டுள்ளது. இந்த யாவே என்ற பெயருக்கும் எல்பாவின் களிமண் தகடுகளுக்கும் தொடர்பு உண்டு..

எல்பா காலத்தில் கடவுளை II/El என்று குறிப்பிட்டு வந்துள்ளனர் "II " என்ற வார்த்தை இல்லாத இடத்தில் "YA" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை நீங்கள் எபிரேய மொழியில் பார்ப்பீர்கள் என்றால் "YAWEH" யாவெஹ் என்று வரும். இதன் மூலம் நம் தேவனின் பெயர் மோசே காலத்திற்கு முன்பாகவே வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

4. கானான் தேசம்

பழைய ஏற்பாட்டில் குற்றம் கண்டு பிடிப்பவர்கள் கானான் தேசம் Genesis 11:31 ல் குறிப்பிட்டுள்ளது போல அக்காலத்தில் கிடையாது. கானான் தேசமே மோசேவின் காலத்தில் இல்லை என்று வாதிடுவர். ஆனால் எல்பாவின் இந்த களிமண் தகடுகள் கானான் தேசம் என்று ஒன்றிருந்ததை பல முறை விளக்கி உள்ளது. அதாவது மோசேக்கு முன் 1000 வருடங்களுக்கு முன்பே கானான் தேசமானது இருந்து வந்ததை அறிந்து கொள்ளலாம்.

5. வேதாகமத்தில் உள்ள இடப்பெயர்கள்

Salilm (the city of Mechizedec மேல்கிஷடேக் ), Hazor, Lachich, Megiddo, Gaza காசா, Dor, Sinai சினாய், Ashtaroth, Joppa, and Damascus தமச்க்கு பட்டணம் என்ற பல பெயர்கள் நம் வேதாகமத்தில் இடம் பெற்றுள்ளது.

Isaiah 10:9 கல்னோ பட்டணம் கர்கேமிசைப்போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?

மேற்கூறி உள்ள வசனத்தில் உள்ள அனைத்து ஊர் பெயர்களும் இந்த களிமண் தகட்டில் இருப்பது நமக்கு கிடைத்த அறிய பொக்கிஷம். ஆமென்

மிகமுக்கியமாக எருசலேம் என்ற பெயரை இந்த களிமண் தகடுகள் தாங்கி உள்ளது. Urusalima (Jerusalem) என்ற பெயரில் இந்த தகடுகள் காட்சி அளிக்கின்றன. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

6. சோதம் கொமாரா

ஆதியாகமம் 14:2 ல் உள்ள சோதோம் கொமாரா ( Sodom and Gomorrah) பட்டணம் இந்த களிமண் தகட்டில் உள்ளது. வேதாகமத்தில் உள்ளது போல அனைத்து பக்க நகரங்களும் குறிக்கப்பட்டுள்ளன.. ஆமென்.
And the king of Sodom and the king of Gomorrah and the king of Admah and the king of Zeboiim and the king of Bela (that is, Zoar) came out; and they arrayed for battle against them in the valley of Siddim, against Chedorlaomer king of Elam and Tidal king of Goiim and Amraphel king of Shinar and Arioch king of Ellasar--four kings against five.” (Genesis 14:8-9)

These five “cities of the plain” recorded in the Bible are precisely those mentioned in the Ebla tablet: Sodom, Gomorrah, Admah, Zeboiim, and Bela
மிக முக்கியமாக விஷயம் என்னவென்றால் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது போலவே இந்த களிமண் தகட்டிலும் இந்த ஐந்து நகரமும் வரிசையாக குறிக்கப்பட்டுள்ளது.

7. வேதாகம மிக முக்கிய பெயர்கள்

மோசேக்கு முன் வாழ்ந்த ஆபிரஹாமின் சரித்திர குறிப்புகள், இஸ்மவேலின் குறிப்புகள், சவுல், இஸ்ரேல், தாவீது என்ற பெயர்கள் இந்த களிமண் தகட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

8. சாலொமோனும் எல்பா தகடுகளும்

மரி என்ற நாட்டில் தலைவன் தோற்றவுடன் எல்பா அரசாங்கத்திற்கு 11,000 டன் வெள்ளியும், 880 பவுண்டு தங்கமும் கொடுத்ததாக இந்த களிமண் தகட்டில் கூறப்பட்டுள்ளது. இது சாலமன் கப்பல்களில் கொடுத்த வெள்ளி மற்றும் தங்கத்தை விட பெரிய பகுதியாகும். இதன் மூலம் சாலமன் 10 டன் கொடுத்தது ஓர் சாதாரண விஷயம், அக்கால நடைமுறையில் இருந்த ஒன்று தான் என்று புரிகிறது.
படியுங்கள் 1 ராஜாக்கள் 10:14 மற்றும் 2 நாளாகமம் 9:13

9. ஆதிகாமம் 1 - கடவுளின் உலக படைப்பும் எல்பா தகடுகளும்

இறுதியாக உங்களுக்கு மிகவும் ஆச்சரியப்படுத்தும் ஒன்றை அறிமுகப்படுத்துகிறேன்... அது நம் தேவன் உலகத்தை படைத்த விதம். பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஆதியாகமம் 1ம் அதிகாரமும் இந்த களிமண் தகடுகளும் ஒத்து போகின்றன.

இப்படி பல விஷயங்கள் நமக்கு ஆச்சரியமாய் இருந்தாலும் நாம் வைத்திருக்கும் வேதாகமம் உலக சரித்திரத்தையே அடக்கி உள்ளது. உண்மையான தெய்வத்தின் பெயரையும் கொண்டுள்ளது. இதை வைத்திருக்கும் நாம் மிகவும் பாக்கியவான்கள்.

நாம் வணங்கும் தெய்வம் எதோ ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த தெய்வம் அல்ல. அவர் இந்த உலகத்தை உண்டாக்கியவர். பல ஆயிரங்களுக்கு முன் வாழ்ந்த பலரும் இந்த உண்மையை தங்கள் சரித்திரத்தில் பதித்துள்ளனர்.. மீண்டும் மற்றொரு உண்மையோடு உங்களை சந்திக்கிறேன்..

நாம் வணங்கும் இந்த இயேசு கிறிஸ்து உண்மையானவர். அவர் முதலும் முடிவுமாய் இருக்கிறார். ஆமென்...

சங்கீதம் 119: 72. அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.

ஆக்கம், தொகுப்பு, படைப்பு

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

http://wiki.answers.com/Q/What_are_the_Ebla_tablets#slide=1
http://en.wikipedia.org/wiki/Ebla_tablets
http://www.netplaces.com/bible-history/uncovering-genesis/the-ebla-tablets.htm
http://www.icr.org/article/ebla-its-impact-bible-records/
http://www.prevailmagazine.org/how-archaeology-proves-the-bible/
Hans H. Wellisch, "Ebla: The World's Oldest Library", The Journal of Library History
Mitchell Dahood, "The God Yā at Ebla?", Journal of Biblical Literature
Moorey, Peter Roger Stuart (1991), A century of biblical archaeology, Westminster John Knox Press, ISBN 978-0-664-25392-9.
Dumper, Michael; Stanley, Bruce E. (2007), Cities of the Middle East and North Africa: A Historical Encyclopedia, ABC-CLIO, ISBN 978-1-57607-919-5.

Chavalas, Mark W. (2003), Mesopotamia and the Bible, Continuum International Publishing Group, ISBN 978-0-567-08231-2.





நன்றி : salomechristo

No comments:

Post a Comment