இஸ்ரேல் என்ற ஒரு சிறிய தேசம் உலக வரலாற்றில் பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியுள்ளது, அவர்கள் மெய்யான ஒரே இறைவனுடைய வாக்குதத்தத்தின் பிள்ளைகள் என்பதை சில கூட்டத்தினர் நம்ப மறுத்து அவர்களை பகைக்கின்றனர், அவர்கள் இறைவனுடைய வாக்குதத்தத்தின்படி இன்றளவும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர், வேறு எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் இஸ்ரேலியருக்கு
நேர்ந்ததுபோல பிரச்சனைகள் நேர்ந்திருந்தால் அப்படிப்பட்ட சந்ததி இன்று பூமியில் இல்லாமல் போயிருக்கும், ஆனால் இவர்கள் இன்றும் பூமியில் ஆசிர்வாதமாக வாழ்ந்து வருவது எதை காட்டுகிறது, அவர்களின் முற்பிதாவாகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபுக்கு வாக்குதத்தம் செய்த தேவன் இன்றளவும் அவர்களுக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார், இனிமேலும் அவர் இருப்பார் என்பதையே காட்டுகிறது,
நேர்ந்ததுபோல பிரச்சனைகள் நேர்ந்திருந்தால் அப்படிப்பட்ட சந்ததி இன்று பூமியில் இல்லாமல் போயிருக்கும், ஆனால் இவர்கள் இன்றும் பூமியில் ஆசிர்வாதமாக வாழ்ந்து வருவது எதை காட்டுகிறது, அவர்களின் முற்பிதாவாகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபுக்கு வாக்குதத்தம் செய்த தேவன் இன்றளவும் அவர்களுக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார், இனிமேலும் அவர் இருப்பார் என்பதையே காட்டுகிறது,
சரி இந்த செய்தியின் தலைப்பிற்குள்ளாக நாம் நுழைவோம், இஸ்ரேல் இன்றைக்கு வறண்ட பாலைவனங்கள் நிறைந்த மத்திய கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு சிறிய தேசம், இந்த தேசத்தில் நீராதாரம் என்பதை பொருத்த வரையில் வறட்சியான இடம் என்றே சொல்ல வேண்டும், குடிநீருக்காக அவர்கள் கடல் நீரையே குடிநீராக்கி பருக வேண்டிய அவல நிலை உள்ளது, அது மாத்திரமில்லாமல், பருவ மழை பொழியும் காலங்களில் அந்த நீரை ஏரிகளாகவும் குழங்களாகவும் வெட்டி சேமித்து பயன்படுத்தி வருகின்றனர், இந்த தண்ணீர் பற்றாக்குறையினிமித்தமாகவே விவசாயத்திற்கு சொட்டு நீர் பாசன முறையை கண்டுபிடித்து மிகுந்த பயனடைந்ததோடு உலகிற்கும் அதை அறிமுகப்படுத்தினர், பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளில் குடிதண்ணீர் என்பது பெட்ரோலை விடவும் விலை அதிகம், அந்த வகையில் இஸ்ரேலிலும் தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது, இஸ்ரேலில் சில ஆறுகள் இருந்தாலும் யோர்தான் நதி மாத்திரமே செழிப்பான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, அதிலும் கோடைக்காலங்களில் வறட்சி காணப்படும்.
இப்படிப்பட்ட நீர்வறட்சி நிறைந்த இந்த தேசத்தில், சில பல நூற்றாண்டுகளாக காணாமல் போயிருந்த ஆறு ஒன்று மீண்டும் தோன்றியுள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா?, ஆறு காணாமல் போகுமா? என்று எடக்கு மடக்கா கேக்காதீங்க, வற்றி வறண்டுப்போன ஆறு என்பதையே அப்படி குறிப்பிட்டேன், ஆம்! அந்த ஆறு இஸ்ரேல் எல்லையில் நேகேவ்(NEGEV OR NEGEB) வனாந்திரத்தில் உள்ள சீன் ஆறுதான், இந்த பெயரை எங்கேயோ படித்த ஞாபகம் வருகிறதே, என்று எண்ணுவீர்களானால் உங்கள் கணிப்பு சரியே, அது எங்கேயோ அல்ல அது பரிசுத்த வேதாகமத்தில்தான் உள்ளது என்று உறுதியாக சொல்பவர்களானால் உங்களுக்கு ஒரு சபாஷ், நிச்சயமாக இந்த ஆறு வேதாகம காலத்தில் காணப்பட்ட ஆறுதான், இந்த நெகேவ் வனாந்திரம் வேதாகம காலத்தில் சீன் என்ற அந்த ஆற்றின் பெயரிலே சீன் வனாந்திரம் என்றே அழைக்கப்படுகிறது,
எகிப்தை விட்டு புறப்பட்ட இஸ்ரேலர் இந்த சீன் வனாந்திரத்தில் சில காலம் தங்கி அதன் பின் தங்கள் பயனத்தை தொடங்கினர் என்பதற்கு ஏராளமான வேத ஆதாரங்கள் உள்ளது, கானான் தேசத்தை வேவு பார்க்க சென்ற 12 வேவுக்காரர்களும் இந்த இடத்திலிருந்துதான் துவக்கினார்கள் என்று வேதம் எண்ணாகமம் 13:21 ல் குறிப்பிடப்பட்டுள்ளது,யாத் 16:1 ல் துவங்கி யோசுவா 15:1 வரை 12 இடங்களில் வேதத்திலே இந்த சீன் பற்றிய குறிப்பு பதிவுசெய்யப்ப்பட்டுள்ளது,
இந்த சீன் ஆறு மற்றுமொரு குறிப்பிடத்தக்க சிறப்பையும் பெற்றுள்ளது, அதென்னவென்றால் வேதாகம காலத்தில் இஸ்ரேல் தேசத்தின் எல்லையை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வேதத்தில் ஆதார குறிப்பு உள்ளது, யோசுவா 15:1 ல் “யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன் வனாந்திரமே தென்புறத்தின் கடையெல்லை”
இந்த சீன் ஆறு பெயெர்செபாவிலுள்ள ரமோன் பள்ளத்தாக்கில் துவங்கி நேகேவ் வனாந்திரங்களை கடந்து சவக்கடலில் கலக்கிறது, இந்த சீன் ஆறு கி.பி 70 ல் இஸ்ரேலர் பூமியெங்கும் சிதறடிக்கப்பட்டபின் வறண்டு போனது, அந்த வனாந்திரத்தில் இப்படியொரு ஆறு ஓடினதற்கான வறண்ட ஆற்றுப்படுகையை மாத்திரமே கண்ட இன்றைய தலைமுறை யூதர்கள் அந்த இடத்தில் மீண்டும் தோன்றியுள்ள இந்த சீன் ஆற்றைக் கண்டு மிகுந்த குதூகலம் அடைந்துள்ளனர்,
இந்த ஆறு எப்படி இத்தனை நூற்றாண்டுகளுக்கு பின் இப்போது மீண்டும் தோன்றியிருக்கும் என்று பார்த்தால் சிலர் சொல்கின்றனர் பருவ மழையின் நிமித்தமாக இந்த ஆறு திரும்ப தோன்றியுள்ளதாக கூறுகின்றனர், ஆனால் இந்த கூற்றை நிபுணர்கள் ஏற்கவில்லை, ஏனென்றால், இந்த வனாந்திரப்பகுதியில் குறிப்பிட்ட மழைக்காலத்தில் ஏற்கனவே மழை பொழிந்துள்ளது ஆனால் அப்போதெல்லாம் தோன்றாத இந்த ஆறு இப்போதுமட்டும் எப்படி தோன்றியிருக்க முடியும், இந்த ஆறு மீண்டும் தோன்றியதற்கான காரணத்தை நிச்சயமாக உறுதிபடுத்தி கூற இயலவில்லை என்றே தெரிவித்துள்ளனர்,
நிபுணர்களுக்கு தெரியாத அந்த உண்மை பரிசுத்த வேதாகமத்தை உடையவர்களுக்கு நிச்சயமாக தெரியும், அதெப்படி சொல்றீங்க அப்படின்னு நீங்க கேட்பீங்க, கிபி 70 ல் சிதறடிக்கப்பட்ட இஸ்ரேலர் மீண்டும் அவர்கள் தேசத்தில் குடியமர்த்தப்பட்டபின் இப்படியாக ஆறு தோன்றும் என்று வேதத்தில் ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக திட்டமாக முன்னறிவித்துள்ளது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?, தயாராகுங்கள் அந்த ஆதாரத்தை காண்பதற்கு, ஏசாயா43:19-21ல் “இதோ, நான் புதிய காரியத்தை செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா?நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்திற்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும்.
இந்த ஜனங்களை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியை சொல்லி வருவார்கள்”, என்பதாக எவ்வளவு துல்லியமாக நம்முடைய வேதம் முன்னறிவித்துள்ளது என்பதை பார்த்தீர்களா?, இந்த தேவன் தாம் வாக்குதத்தம் பன்னின தம் ஜனங்களுக்கு எவ்வளவு உண்மையுள்ளவராக இருக்கிறார் என்று பாருங்கள், இஸ்ரேலர் அவருக்கு உண்மையுள்ளவர்களாயிருந்தார்களோ இல்லையோ உண்மையுள்ள தேவன் அவர்களுக்கு கொடுத்த வாக்குதத்தத்தில் சற்றும் அசதியாயிராமல் அதை நிறைவேற்றுகிறார், இந்த தேவனை உங்கள் வாழ்கையில் ஏற்றுக்கொள்வீர்களானால் உங்கள் வாழ்க்கையிலும் அவர் உண்மையுள்ளவராயிருப்பார், அவருடைய கிருபை இரக்கங்களுக்கு முடிவில்லையே, இன்றே அவரை உங்கள் மனதில் ஏற்றுக்கொள்ளுங்கள்,
http://www.dailymail.co.uk/sciencetech/article-2582777/The-incredible-moment-river-REBORN-Israeli-desert-delight-watching-locals-predicted-return.html
http://www.timesofisrael.com/negev-rivers-rebirth-caught-on-film/
http://beforeitsnews.com/alternative/2014/09/dramatic-video-captures-rebirth-of-the-river-zin-in-israels-negev-desert%E2%80%8F-3026712.html
No comments:
Post a Comment