Sunday, 3 August 2014

கணவனை கவிழ்த்துபோடும் பெண்கள் - ஜாக்கிரதை!

வேதத்தின் அடிப்படையில் ஸ்திரியானவளே முதலில் பாவத்துக்கு உட்பட்டாள் என்பது நாம் அறிந்தது.

I தீமோ 2:14 ஆதாம் வஞ்சிக்கப்பட வில்லை,
ஸ்திரீயானவளேவஞ்சிக்கப்பட்ட மீறுதலுக்க உட்பட்டாள்


6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

வஞ்சிக்கபட்ட ஸ்திரியாலேயே ஆதாம் பாவத்துக்கு உட்பட்டான்

ஆகினும்:
நீதிமொழிகள் 14:1 புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.

ஒருவீட்டை நன்றாட கட்டவும், அதை பயனற்றதாக இடுத்து போடவும் வல்லமையுள்ளவளாக ஸ்திரீகள் இருப்பதை வேதம் நமக்கு போதிக்கிறது!

அதுபோல் இன்றும் உலகில் நல்ல  பரிசுத்தவான்களை கெடுத்து போடுவதிலும் ஒன்றுக்கும் உதவாத அயோக்கியர்களை திருத்துவதிலும் கூட ஸ்திரிகள் முதலிடம் வகிக்கிறார்கள் என்பதை நான் பல குடும்பங்கள மூலம் அறிந்துகொண்டேன்.

இவற்றுள் புருஷனை கெடுத்துபோட்ட ஸ்திரிகள் குறித்து பல வேதாகம சம்பவங்கள் வேதத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது அவற்றை குறித்து நாம் ஆராயலாம்: அவற்றுள் முக்கியமானது மனைவியால்  தூண்டப்பட்டு பாவம் செய்த ஆகாப் ராஜாபோல் வேறொருவரும் இல்லை என்று வேதம் சொல்கிறது:

I இராஜாக்கள் 21:25 தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னைவிற்றுப்போட்ட
ஆகாபைப்போல ஒருவனுமில்லை.

இந்த ஆகாப் ராஜா என்ன செய்தான்?  

நாபோத்தின் திராட்சை தோட்டத்தின் மேல் ஆசை வைத்தான் ஆகாப்! ஆனால் நாபோத்தோ அதை ஆகாபுக்கு கொடுக்கவில்லை இங்கு ஆகாபின் மனைவி யேசபேல் இடைபட்டு  8. அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை
அவைகளுக்குப் போட்டு,அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள்.

12. அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி
 நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள்.

13. அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டு பேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து
14. பிற்பாடு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியுண்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.

16. நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத் தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்துபோனான்.

அதாவது தன் மனைவியின் தந்திரப்படி நாபோத்தை கொன்று, அவன் திராட்சை தோட்டத்தை ஆகாப் அபகரித்தான்!

இதுபோன்ற அருமையான தந்திரங்களை புருஷனுக்கு சொல்லிகொண்டுக்கும் பல ஸ்திரிகளை நாம் அறிந்திருக்கலாம். புருஷர்களும் மனைவியின் தந்திரத்துக்குசெவிகொடுத்து  வீழ்ந்து போயிருக்கலாம்

மத்தேயு 10:36 ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள்
அவன் வீட்டாரே" என்ற இயேசுவின் வார்த்தைகள் அடிப்படையில் வீட்டில் இருக்கும் ஒரு ஸ்திரியானவள்
தன் புருஷனை எவ்வாறெல்லாம் கவிழ்த்துபோட முடியும் என்பதை அவரவர் அறிந்த விதத்தில் நடைமுறை வாழக்கை சம்பவத்துடன் இங்கு பதிவிடலாம்.

(தகாத ஆண்களால் பாவத்துக்குள் வீழ்ந்துபோன அனேக  பரிசுத்த ஸ்திரிகளும் உலகத்தில் உண்டு! எனவே இங்கு ஸ்திரிகளை குறைசொல்வதற்காக நான் இவைகள எழுதவில்லை. மாறாக சாத்தான் தன் தந்திரத்தை யார் யார்
மூலம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தி மனுஷர்களை கவிழ்க்க முடியும் என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே இவைகள் இங்கு எழுதப்பட விரும்புகிறேன். அடுத்ததாக புருஷன் ஸ்திரியை எவ்வாறு கவிழ்க்க முடியும்? என்பது குறித்தும் நமது வீட்டில் நம்மோடு இருக்கும் மற்றவர்கள் எப்படி நமக்கு சத்துருவாகி நம்மை கவிழ்க்க முடியும் என்பது குறித்து கர்த்தருக்கு சித்தமானால் வேறு திரிகளில் ஆராயலாம்)  



நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)


பணத்தேவையை அதிகரிப்பதன் மூலம் கணவனை பாவத்துக்குள் தள்ளுவது!

நான் பார்க்கும் எங்கள் பக்கத்துவீட்டில் உள்ள பல ஸ்திரிகள் குடும்பத்தை சரியாக நிவகிக்க தெரியாமல், குடும்ப வருமானத்தை கணக்கில் கொள்ளாது  வரவுக்கு மீறி செலவு செய்வதோடு ஆடம்பர பொருட்கள் மேல் ஆசைப்பட்டு அதிகம் பணம் செலவு செய்து அதை  வாங்க முயல்வது அதனால் அவர்கள் பண பற்றா குறைக்கும் அதை தொடர்ந்து  கடனும்  பிரச்சனைகளும் உண்டாகிறது.

பின்னர் என்ன? இருக்கவே இருக்கிறார் கணவர்! அவரிடம் "உன்னை கல்யாணம் பண்ணி என்ன சுகத்தை கண்டேன்? வந்த நாளில் இருந்து எனக்கு எதுவுமே கிடைக்கவில்லை, ஒரு நல்ல பட்டு சேலைகூட இல்லை, அது இல்லை இது இல்லை, பக்கத்து வீட்டில் எல்லாம் வைத்திருக்கிறார்கள் நான் என்ன பாவம் செய்தேனோ உன்னை கட்டி மாரடிக்கிறேன்" என்பது போல அர்ச்சனை பாட்டுக்களை தினமும் பாட. அதை சகிக்க முடியாத கணவனோ பிரச்சனையை சரி செய்ய மனைவியை சமாதனப்படுத்த லஞ்சம் வாங்குவது திருடுவது ஏமாற்றுவது  போன்ற குறுக்கு வழியில் இரங்கி பண வரவை பெருக்கி தேவனுக்கு முன்னால்  தன்னை கெடுத்துகொள்வது உண்டு

எங்கள் ஊரில் ஒரு நல்ல மனுஷர் ஒருவர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். மிகவும் எழிமையாக இருக்கும் அவர் செய்யும் எந்த ஒரு உதவிக்கும் யாரிடமும் சிறுதொகையை
கூட லஞ்சமாக பெறுவதில்லை. எத்தனையோ பேர் பணம் கொடுக்க முன்வந்து வாங்க மறுத்துவிட்டார். இது அவர் மனைவிக்கு பிடிக்கவேயில்லை. அவர் மனைவி அவரிடம்  "நீர் பணம் வாங்கவிட்டால் வாங்காமல் இரும், கொடுக்கும் ஆட்களிடம் நானாவது வாங்கி கொள்கிறேன்" என்று சொல்லி அடிக்கடி சண்டை போட்டுக் நச்சரித்து கொண்டே இருந்தது. அவரும் எத்தனை நாட்கள்தான் பொறுப்பார்அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகருமல்லவாசில வருடங்களே நேர்மையாக இருந்த அவர் இப்பொழுது ஒரே ஒரு சிபாரிசு செய்ய  ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் பண்ணும் நிலைக்கு வந்துவிட்டார்.(எல்லாம் மனைவியின் உபயம்) ஜனங்களும்கூட  தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் லஞ்சம் கொடுப்பதற்கு துடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இங்கு நடப்பது ஏதோ மனைவியின் பிடிவாதம் என்றோ அல்லது மக்களின்  பண ஆசை என்றோ எடுத்துகொள்ள வேண்டாம்.

இங்கு உண்மையில் நடப்பது உங்களை கவிழ்ப்பதற்கு சாத்தான் தந்திரமாக உபயோகிக்கும் ஆயுதமே உங்கள் மனைவி மற்றும் லஞ்சம் கொடுக்க முன்வரும்  ஜனங்கள்! எனவே எச்சரிக்கை அவசியம்!

ஸ்திரியை பற்றி நீதிமொழிகள் இவ்வாறு சொல்கிறது:
நீதி 30:20 அவள் தின்று, தன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.

ஏற்கெனவே ஏவாள் கொடுத்த கனியை புசித்துவிட்டு ஆண்டவரிடம் "ஸ்திரி கொடுத்தால் புசித்தேன்" என்று ஸ்திரிமேல் பழியை போட்டு நழுவ பார்த்த  ஆதாமை ஆண்டவர் தண்டியாமல் சும்மா விடவில்லை என்பதை நினைவு படுத்தி கொள்ளவும்.

இதுபோல் நல்ல ஸ்திரிகளை பாவம் செய்ய தூண்டும் கணவன்மார்களும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்! யாரும் யார்மேலும் பழியைபோட்டு தப்பித்துவிட முடியாது!

யார் தூண்டுதலால் பாவம் செய்தாலும் பாவம் பாவம்தான் அதற்க்கு நிச்சயம் தண்டனை உண்டு

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)












நன்றி:lord.activeboard

1 comment: