Sunday, 17 August 2014

எச்சரிக்கை - யெகோவா சாட்சிகள்

jehovas witness
கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, கர்த்தருடைய பரிசுத்த நாமத்தினாலே உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு முகநூலில் மதம் மாறிய கிறிஸ்த்தவர் என்று தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர் எழுதிய கட்டுரையை படித்தேன்.


அதில் அவர் தான் ஒரு கிறிஸ்த்தவர் என்று தன்னை கூறிக்கொண்டாலும் இயேசு கிறிஸ்து கடவுள் அல்ல. அவரை நாம் வணங்க கூடாது என்று எழுதியுள்ளார்.

இப்படிப்பட்ட கட்டுரைகளை படிக்க நேர்ந்தாலும் அவரை போன்ற (யெகோவா சாட்சிகள்) ஆட்களை சந்திக்க நேர்ந்தாலும் நாம் வேதாகமத்தில் உள்ள சில வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும்.

உண்மையான கிறிஸ்த்தவன் என்பதின் அர்த்தம்
கொலே 1:28  எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்.
கொலே 1:29  அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.


உண்மையான கிறிஸ்த்தவனின் நம்பிக்கை
பிலி 2:10  இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
பிலி 2:11  பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

1 யோவ 5:20  அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.


மத்தேயு 28:18  அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மத்தேயு 28:19  ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
மத்தேயு 28:20  நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.


யோவ 20:28  தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.


யோவ 9:38  உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்.


வேதத்தின் எச்சரிக்கை
1யோவ 2:22  இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
1யோவ 2:23  குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.

2யோவ 1:9  கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
2யோவ 1:10  ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
2யோவ 1:11  அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்.

இப்படிக்கு
Dr.R.டேவிட் தமிழரசு

Doctor and Preacher.

No comments:

Post a Comment