Tuesday, 31 December 2013

எகிப்திலிருந்து கானானுக்குச் செல்ல 40 வருடமா?????? Egypt to Canaan

எகிப்திலிருந்து கானானுக்குச் செல்ல  எவ்வளவு நாட்கள் ஆகும்?



எகிப்திலிருந்து இஸ்ரவேலுக்கு சுமார் 220 மைல் (அதாவது 350 கி.மீ.)

சுமாராக திருச்சியிலிருந்து, சென்னைக்குள்ள தூரம். 2 வாரங்களில் சென்றடையலாம். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் 40 வருடங்களாக வனாந்தரவழியாய் போனார்கள்.


மேலே படத்தில் ஊதா நிறம் (violet color) - இஸ்ரவேல் ஜனங்கள் சென்ற வழி.


எண்ணாகமம் 13, 14ம் அதிகாரங்களில்: கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு, ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒருவரை தெரிந்தெடுத்து அனுப்பினார்கள். அவர்களில் காலேப்பும் யோசுவாவும் தவிற மற்றவர்கள் துர்ச்செய்திபரவச்செய்து [முக்கியமாக தேவன்மேல் விசுவாசம் இல்லை] தேவனுடைய கோபத்திற்கு ஆளானார்கள். அங்கேதான் இந்த கூடுதல் நேரம் வருகிறது. கர்த்தர் சொன்னார், "எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை. கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள். உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும். அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பதுவருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள்."


படத்தில் ஆரஞ்சு நிறம் (orange color) - மாற்று வழி.

இங்கேதான் அந்த நாற்பது வருடங்கள் சுமத்தப்படுகிறது. இல்லாவிட்டால் சீக்கிரத்தில் போயிருக்கலாம்.



உபாகமம் 8:2 உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.



 நன்றி:tamilbibleqanda

No comments:

Post a Comment