Thursday, 31 October 2013

நினிவே.........


csi goudie church, tiruvallur

பேரன்புடையீர்,
           இறை மகன் இயேசு கிறிஸ்த்துவின் பெயரில் நல்வாழ்த்துக்கள்.
இன்றைய நாட்களில் நம்முடைய நேரங்கள், காலங்கள், வாய்ப்புகள், உடைமைகள் அனைத்தும் ஆண்டவருக்கு கொடுக்கவும்,
நம்முடைய வாழ்வை ஆண்டவருடைய வழியிலும், வாழ்விலும் முழுமையாக ஒப்புகொடுக்க அழைக்கப்படுகிரோம்.
நாம் வாழ்கிற வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆண்டவருக்கு ஒப்புகொடுக்கப்படவில்லையெனில் ஆண்டவர் நம்வாழ்வை நினிவேவை போல மாற்றிப்போடுவார்.
யோனாவின் நாட்களில் நினிவேயின் மக்கள் ஆண்டவருடைய பாவமன்னிப்பையும் அவருடைய மனதுருகுதலையும் பெற்றனர்.யோனா 4:11 வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத (1,20,000) ஒரு இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கும் அதிகமான மனுஷர் மீது பரிதவிப்பதாக ஆண்டவரின் வார்த்தை கூறுகிறது.

ஆனால் நாகூம் தீர்க்கர் நினிவேயின் அழிவைக்குறித்து தமது தீர்க்கதரிசன நூலில் கூறியுள்ளார். நாகூம் கி.மு. 713 ஆம் ஆண்டுகளில் தீர்க்கதரிசனம் உரைத்தார் (நாகூம் : 1:8,10,14  2:6-7  3:12,13,15,19 செப்பனியா 2:13  நினிவேவை இரத்தம் சிந்திய நகரம் (எசேக் 24:9) என அழைக்கிறார்கள்.
இந்த நினிவே புரண்டு வரும் வெள்ளத்தினாலும்(1:8 2:6 3:12) நெருப்பினாலும்,(3:13-15) பட்டயத்தினாலும் (3:15) மது வெறிக்கொண்டிருக்கும் போது அழிக்கப்படும்(1:10) என அதற்கு எதிராக நாகூம் தீர்க்கதரிசி கூறுகிறார்.

நினிவே பட்டணம் நோவாவின் நிம்ரோத் என்பவனால் கட்டப்பட்டது. (ஆதி 19:9-11) சுமார் கிமு 2000 ஆண்டுகளாக இப்பட்டனம் இருந்தது.பிற்காலத்தில் இப்பட்டணம் அசீரிய அரசின் தலைநகராக இருந்தது. இப்பட்டணத்தின் சுற்றளவு 7மைல் என்றும் அதை சுற்றியும் 150 அடி அகலமுள்ள அகழி இருந்ததென்றும், இரண்டு கோட்டை சுவர் இருந்ததென்றும், அதன் உள்கோட்டை சுவர் 100 அடி உயரமும் 50 அடி அகலமும் கொண்டதாகவும், அதன் உச்சியில் 3 தேர் வண்டிகள் போகதக்க அகலமுள்ளதாக இருந்தது. அசீரியர் ஒரு யுத்த வீரர், தாங்கள் வென்ற பிரதேசங்களின் கொள்ளையினால் நினிவே பட்டணத்தை ஒரு மிகு பட்டணமாக ஆகினர். கிமு 650ல் ஆசூர்பாணிப்பல் என்பவன் அசீரியாவின் அரசனாக இருந்தான். இஸ்ரேல் மீது படையெடுத்து கொள்ளையடித்து அனைவரையும் கைதிகளாக பிடித்து வந்து கைதிகளின் கைகளையும் கால்களையும் வெட்டிபோடுவதும் மூக்கை அறுத்து விடுவதும், கண்களை குருடாக்குவதும் சர்வ சாதாரனமான தன்டனை. இவன் தான் கொண்டுவந்த கைதிகளின் தலைகளினாலேயே குன்றுகளை உண்டாக்குவானாம், எனவே நாகூம் (நாகூம்3:1) இரத்த பழிகளின் நகரம் என அழைக்கிறார்.

ஆண்டவரின் தீர்க்கதரிசனம் நாகூம் வழியாக நிறைவேறுவதைப் பார்க்கிறோம் (நாகூம் 2:6,7 கிமு 713ல்) “ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும் அரமணை கரைந்துபோம், அவன் சிறைப்பட்டுபோக தீர்மானமாயிற்று அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிளே அடித்துகொண்டு புறாக்களைப் போலச்சத்தமிட்டுக் கூடப்போவார்கள்” நினிவே பட்டணம் புரண்டுவரும் வெள்ளத்தினால் அழியும் என்று நாகூம் 1:8, 2:6, 3:12ல் மூன்று முறை அழுத்தந்திருத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. அதை பற்றி தொல்பொருள் ஆராய்சியாளர் சர்ஹென்றி லேயார்டு என்பவர் கூறும்போது நினிவே பட்டணம் டைகிரீஸ் ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்தது. டைகிரீஸ் ஆற்றுக்குக் கோஷர் என்ற கிளை ஆறு ஒன்றும் உண்டு.

 இவைகளின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டு தண்ணிரை திறந்துவிட மதகுகள் இருந்தனவென்றும் பட்டணத்தின் மேல் படையெடுத்த மேதிய படைகள் ஏற்கனவே பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்த டைகிரீஸ் ஆற்றின் மதகுகளை உடைத்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட வைத்தப்படியால் ஆறு கரை புரண்டு ஓடிப்பட்டணத்தின் கோட்டைச்சுவர்களில் 2 ½ மைல் அளவு தூரத்திற்கு அடித்துகொண்டு போனதுமல்லாமல் பட்டணத்தின் தாழ்வான பகுதிகளை யெல்லாம் வெள்ளம் மூடிவிட்டது.

கி.மு 612ல் நினிவேயின் மன்னன் அசூர்பானிபால் கோட்டைக்கு வெளிப்புறத்திலேயே தன் வீரர்களோடு தன் வெற்றிகளைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது மேதியப்படை இரவில் படையெடுத்தது.
தன்படையை கூட்டும்முன்  வெள்ளம் கோட்டை மதிலை இடித்துக் தள்ளிக்கரத்துப் போட்டது. நாகூம் 3:12ல் சொல்லியப்படி அத்திமரத்தை உலுக்கும் போது பழங்கள் உதிர்வது போல  நினிவேயின் கோட்டைச் சுவர் உதிர்ந்து போயிற்று. இராணி தன் தாதிமார்களை கூட்டிக்கொண்டு மார்பில் அடித்துகொண்டு  (நாகூம் 2:6) சத்தமிட்டுக் கொண்டு அரண்மனைக்குள் ஓடினால்.

 இராஜா நம்பிக்கை இழந்தவனாக தன் மனைவி, மறுமனையாட்டிகள், தன் சம்பத்து முழுமையோடும் அரண்மனையின் ஒரு பகுதியிலடைத்து தானும் தீவைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சாம்பலாக்கிவிட்டன். (நாகூம் 3:13,15) நினிவேயின் மக்கள் தங்களை இரட்டுடுத்தி சாம்பலில் உட்கார்ந்து கடவுளின் மன்னிப்பை பெற்றனர். ஆனால் அதை இழந்து போய் தங்கள் வாழ்வில் பாவம், சாபமாக தங்களை விற்றுப்போட்டார்கள்.

எனக்கு அருமையான சகோதர சகோதரிகளே நாம் வாழும் வாழ்வு அர்த்தமுள்ளதாகவும் ஆண்டவரின் பார்வையில் உண்ணமையுள்ளதாகவும், அவருக்கு பிரியமானதாகவும் வாழவே அழைக்கப்படிருகிறோம். ஆனால் இவைகளை மறக்கிற போது நாம் எப்படிபட்ட திறமைசாலியானலும் அரசியல் பலம் இருந்தாலும், படிப்பு, பணம் வசதியான வாழ்வு இருந்தாலும், நினிவேயின் அரசன் அசூர்பானிபால் போலவும் அவன் வாழ்வு போலவும் மாறிவிடும் என்பதை நாம் மறக்க கூடாது.

எனவே ஆண்டவரின் அன்பிலே நிலைத்திருந்து நமது வாழ்வை ஆண்டவருக்கு அற்பணிப்போம். அப்போது நம் சந்ததி எல்லாவற்றிலும் ஆண்டவருக்கு சாட்சியாக வளரும் என்பதில் சந்தேகமில்லை.

இறைப்பணியில்
அருள்திரு.A.இரத்தினசாமி
ஆயர் – CSI கெளடி நினைவாலயம்
திருவள்ளூர்.


1 comment:

  1. மிகவும் நன்றி இந்த செய்தி மூலமாக நினைவு பற்றினத்தின் வரலாறு தெரிந்து கொள்ள முடிந்தது மற்றும் நம் வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்களை உணர முடிந்தது

    ReplyDelete