Sunday, 20 October 2013

காஷ்மீரில் இருப்பது இயேசுவின் கல்லறையா??????????? பாகம் - 1

இயேசுவின் கல்லறை

காஷ்மீரில் இருப்பது இயேசுவின் கல்லறை
 அல்ல.
ஒரு சுற்றுலா வழிகாட்டி கிளப்பிய "காஷ்மீரில் இருப்பது இயேசுவின் கல்லறை" என்ற செய்தியால், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து குவியத் தொடங்கினர்.

அது ஒரு இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாகும். அது தற்போது சுற்றுலாப்பயணிகளுக்கு மூடப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இருக்கும் "யூஸா ஆசாஃப்" என்பவரின் ரோஸபல் (Rozabal) புனித ஸ்தலம் என்பது தற்போது யாரும் வரக்கூடாது என்று தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் வருபவர்கள் அங்கு இருக்கும் சமாதியில் எஞ்சியிருப்பதை எடுத்து DNA சோதனை செய்ய விரும்பினார்கள். அங்கிருக்கும் எலும்புகளை எடுத்து கார்பன் தேதி குறிப்பீடு செய்யவும் விரும்பி வேண்டினர்(request).

ஆனால் ரியூட்டர்ஸ் (Reuters) என்ற செய்தி நிறுவனத்துக்கு முகமது அமின் ரிங்ஷால் என்பவர் சொல்லும்போது, "நாங்கள் அப்படிப்பட்ட வேண்டுதலை நிராகரித்துவிட்டோம்" என்றார். மேலும், "இப்படி ரோஸ்பல் சமாதியை "இயேசுவின் கல்லறை" என்றழைக்கும் வெளிநாட்டவரின் கூற்றுகள், இஸ்லாமியர்களின் புனித உணர்வுகளை (sentiments) புண்படுத்துகின்றன. எனவே இந்த தொந்தரவுகளையெல்லாம் தவிர்க்கவே நாங்கள் இந்த புனித ஸ்தலத்தை பூட்டிவிட்டோம்" என்றார்.

1973ம் வருடம் ஒரு உள்ளூர் பத்திரிக்கையாளரான அஸிஸ் காஷ்மீரி என்பவர் கிறிஸ்து சிலுவையில் உயிர்பிழைத்து காஷ்மீருக்கு வந்து அங்கே புதைக்கப்பட்டார் என்று வாதம் செய்தாராம். அவருடைய புத்தகத்தில் "யூஸா ஆஸாஃப் என்பவர் வெளிநாட்டிலிருந்து வந்தார்; அவர் ஒரு தூதுவர். அவர் இஸ்ரவேலிலிருந்து வந்தார். அவர் தனது கொள்கைகளை பரப்பும்படி வந்தார். அங்கே வாழ்ந்து மரித்தார். யூஸ் ஆஸாஃப் என்பவர் ஈசா என்னும் இயேசு. யூஸ் ஆசாஃப் என்றால் குணமாக்குபவர், போதகர் என்று பொருள்" என்கிறார்.

இது பைபிளுக்கு முரண்பாடாக உள்ளது. இயேசு என்றால் ஜனங்களை பாவங்களிலிருந்து விடுதலையாக்கி இரட்சிப்பவர் என்று பொருள். மேலும் சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தபின்பு, 40 நாட்கள் கழித்து அப்படியே வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்று இரண்டு தேவதூதர்கள் சொன்னார்கள். மேலும் அங்கே இயேசு எடுத்துக்கொள்ளப்பட்டதற்கு அநேகர் சாட்சிகளாக இருந்தனர். அவர் மீண்டும் வரும்போது, ஒலிவமலையில் வந்து இறங்குவார் என்று மிகவும் தெளிவாகவும் தீர்க்கதரிசனம் உள்ளது.

உள்ளூர்வாசிகளாகிய இஸ்லாமியர்களிடம் விசாரித்தபோது, ரோஸபல் என்னும் புனித ஸ்தலமானது, "உண்மையிலேயே சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீநகருக்கு வந்த இரண்டு புகழ்பெற்ற இஸ்லாமியர்களாகிய யூஸா ஆஸாஃப் (Youza Asaf) மற்றும் சையத் நஸீர்-உத்-தின் (Syed Naseer-ud-Din) என்பவர்களின் கல்லறையே என்றனர். சில நூற்றாண்டுகள் எங்கே? 2000 வருடங்கள் எங்கே?

நாளைக்கு சுற்றூலாப் பயணிகளை இழுக்க "தாஜ்மகாலில் முகமது நபி புதைக்கப்பட்டார்" என்றோ, "இயேசுவின் கல்லறை எகிப்தின் பிரமிடு" என்று புரளி வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இயேசு : [சிலுவையிலே] மரித்தேன், இதோ சதா காலமும் உயிரோடிருக்கிறேன். நான் மரணத்துக்கும், பாதாளத்துக்குமுரிய திறவுகோலை உடையவராயிருக்கிறேன் என்றார். சதா காலமும் இருப்பவர் தேவன் ஒருவரே.

இயேசுக்கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

எனவே காஷ்மீரில் இருப்பது இயேசுவின் கல்லறையல்ல.
இயேசுவின் கல்லறை எருசலேமிலே உள்ளது.

அந்தக் கல்லறை இன்றும்  காலியாகத்தான் உள்ளது.



நன்றி:tamilbibleqanda.blogspot.in

No comments:

Post a Comment