”காதலிக்க நேரமில்லை” புகழ் பிரபல நடிகர் திரு.T.S பாலையா அவர்களின் புதல்வனான திரு.ஜூனியர் பாலையா அவர்களின் குடும்பத்தில் ஒரு காலத்தில் பணத்திற்கு பஞ்சமில்லாதிருந்தது. T.S பாலையா அவர்களின் சொத்து ஒரு காலத்தில் 240 ஏக்கர் தேரும்.
இது சென்னையில் மட்டும். இவர் வீட்டின் பிறந்த நாள் விழாக்களில் ஓர் பெரிய கூடை நிறைய பணத்தை போட்டு இவர்களில் தலையில் கொட்டுவார்களாம். இன்றைக்கும் இவரது தாயார், சகோதரர் மற்றும் ஜூனியர் பாலையா அவர்களின் பெயர்களை பல தெருக்களுக்கு வைத்திருக்கிறார்கள். இவரின் தந்தையார் பெயரில் ஓர் காலனியே உள்ளது. மிகபெரிய கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த இவர், மனம் போன போக்கில் தன்னுடைய நண்பர்களுடன் தன் வாலிப வயதில் பாவமான வாழ்க்கையை பாவம் என்றே தெரியாமல் வாழ்ந்து வந்தார். ஆனால் இவை அனைத்தும் நிரந்தரம் இல்லை. இயேசு கிறிஸ்துவே நிரந்தரம் என்று புரிந்து கொள்ளக்கூடிய நேரம் இவர் வாழ்க்கையிலும் வந்தது.
இது சென்னையில் மட்டும். இவர் வீட்டின் பிறந்த நாள் விழாக்களில் ஓர் பெரிய கூடை நிறைய பணத்தை போட்டு இவர்களில் தலையில் கொட்டுவார்களாம். இன்றைக்கும் இவரது தாயார், சகோதரர் மற்றும் ஜூனியர் பாலையா அவர்களின் பெயர்களை பல தெருக்களுக்கு வைத்திருக்கிறார்கள். இவரின் தந்தையார் பெயரில் ஓர் காலனியே உள்ளது. மிகபெரிய கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த இவர், மனம் போன போக்கில் தன்னுடைய நண்பர்களுடன் தன் வாலிப வயதில் பாவமான வாழ்க்கையை பாவம் என்றே தெரியாமல் வாழ்ந்து வந்தார். ஆனால் இவை அனைத்தும் நிரந்தரம் இல்லை. இயேசு கிறிஸ்துவே நிரந்தரம் என்று புரிந்து கொள்ளக்கூடிய நேரம் இவர் வாழ்க்கையிலும் வந்தது.
இவர் நடித்த முதல் படத்திற்கு பிறகு 3-ம் நாளில் இவரின் தந்தை இறந்து விட்டார். வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. அதன் பிறகு இவரின் தாயார் சுகவீனமாய் படுத்து விட்டார்கள். இந்த நேரத்தில் நிலம் விற்பது தொடர்பாக ஓர் பிரச்சினை ஆரம்பித்து தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்கிற பயம் இவரை ஆட்டிபடைக்க ஆரம்பித்தது. யோபு 3:25 ல் "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது" என்று சொல்லப்பட்டது போல் இவரின் வாழ்க்கையிலும் ஆனது. விக்கிரகங்களை வணங்கினால் பயம் நீங்கும் என்று பலரும் சொன்னதால் பல இந்து கோவில்களுக்கு சென்று வழிபடுவார். போகாத இடம் இல்லை. ஆனாலும் பயத்தில் தூக்கம் இல்லாமல் போனது. பயங்கர குடிகாரனார். குடும்பத்தில் சேமிப்பு எதுவும் கிடையாததால் தந்தை இறந்த பிறகு இவரின் தாயாருக்கு நெருக்கமானவர்கள் அவரை ஏமாற்றி கையெழுத்து வாங்கி சொத்தையெல்லாம் அபகரித்துக் கொண்டனர். இதன் மூலம் பல துயரங்களுக்கு இவர் ஆளாகிப்போனார். அதுவரை பணத்தின் பெருமையில் உல்லாசமாக இருந்த இவரின் வாழ்க்கையில் சோகம், ஏமாற்றம், வெறுப்பு, துன்பம் என்று பல புயல்களில் அகப்பட்டு இருள் என்னும் ஓர் மாயைக்குள் திணிக்கப்பட்டார். சினிமா உலகில் ஸ்ட்ரைக் நடந்த போது இவருக்கு வேலை இல்லாமல் போனது. வருமானமும் நின்று விட்டது. சேமிப்பு இல்லாததினால் கடன் வாங்க ஆரம்பித்தார். நாளடைவில் கடன் அடைக்க முடியாமல் கடனாளியானார்.
நண்பர்கள் மாயமாகிப் போனார்கள். ஒரு முறை ஒரு நண்பன் வீட்டிற்கு சென்ற போது அவர் இவரின் வருகையை தெரிந்து கொண்டு "என்ன செக் bounce ஆகிவிட்டதா என்று சத்தம் போட்டு அவமானப்படுத்தினதாக மனவருத்தத்துடன் குறிப்பிடுகிறார். இதன் மத்தியில் இவர் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த ஓர் சகோதரி தனக்கிருந்த கிழிந்த ஓர் வேதாகமத்தை இவர் மனைவியிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அதை படித்த மாத்திரத்தில் தேவன் அவரிடம் பேசுவதை உணர்ந்த அவர் மனைவி இயேசு கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சராக ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு ஓர் ஆலயத்தில் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டார். இதை ஜூனியர் பாலையாவிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் இவரோ அதை கண்டுகொள்ளவில்லை. ஓர் நாள் கடன் கொடுத்த நண்பர் வீட்டிற்கு வந்து ஜூனியர் பாலையா தற்கொலை செய்து கொண்டால் கடனை திருப்பி தர வேண்டாம் என்று கூறினார். இதைக் கேள்விப்பட்ட ஜூனியர் பாலையா தற்கொலை செய்துகொள்ளலாமென எண்ணி நன்றாக குடித்துக்கொண்டு காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். சென்ற வேகத்திலேயே மீண்டும் கடவுள் கிருபையால் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்.
அதன் பிறகு இவர் மனைவி இவரை ஒரு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார். ஆலயத்தில் அழுகையோடு "ஏசுவே, ஏசுவே" என்று வேதனையில் கதறின போது தன் கைப்பேசி அழைக்கவே எடுத்து பேசியிருக்கிறார். அதில் இவரை ஏமாற்றி சொத்தை, பணத்தை அபகரித்தவர் மீண்டும் பணத்தை கொடுப்பதாக சொன்னார். இவரால் நம்பவே முடியவில்லை. தேவன் அங்கேயே ஓர் அற்புதத்தை செய்தார். ஜூனியர் பாலையா அவர்கள் இரட்சிக்கப்பட்டு 10-4-2013 அன்று ஞானஸ்நானம் எடுத்து கொண்டார். இன்று தேவனை அறியாத மக்களுக்கு இயேசுவை பற்றி சொல்ல தன்னை அர்ப்பணித்து ஊழியம் செய்து வருகிறார். அல்லேலூயா. ஆமென்.
இந்த சாட்சியை படித்த எனக்கன்பான கிறிஸ்தவ பெயரை வைத்துகொண்டு உலகபிரகாரமாய் வாழும் கிறிஸ்தவ நண்பர்களே, மற்ற மதங்களை சேர்ந்த சகோதர சகோதரிகளே "இயேசு உங்களை நேசிக்கிறார்" வேதாகமத்தில் ஓர் வசனம் உண்டு "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே. நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்". இது தேவன் கொடுக்கும் ஓர் அன்பான அழைப்பு. நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் சரி. இருக்கிற வண்ணமாகவே இயேசுவினிடத்தில் வாருங்கள். உங்கள் வாழ்க்கையும் மாறும். பரிசுத்த வேதாகமம் எங்காவது கிடைத்தால் தவறாது வாசியுங்கள். தேவன் உங்களோடு பேசுவார். உங்கள் காதுகள் நிச்சயம் கேட்கும்.
எனக்கு அன்பானவர்களே... ஜூனியர் பாலையா சொல்வதெல்லாம் தான் கஷ்டப்பட்ட போது யாரும் வந்து இந்த இயேசுவை தனக்கு சொல்லவில்லை என்பது தான். அன்பு நண்பர்களே, இந்த சாட்சியையாவது உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களும் தேவனை அறிந்து கொள்ளட்டும். தொடர்ந்து அவர்களுக்காக ஜெபியுங்கள். என்றாவது ஓர் நாள் அவர்கள் தேவனுக்குள்ளாக வருவார்கள். உங்கள் நண்பர்களுக்காக, அண்டை வீட்டாருக்காக, கூட வேலை செய்பவர்களுக்காக ஜெபம் செய்ய ஆரம்பிக்கலாமே. தேவன் உங்களை ஆசீர்வதிபாராக.
Youtube: 1.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=b_zPInMPlXY
2.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Qkpj8JFV-FU
3.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=pWK1VMmnsBo
Youtube: 1.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=b_zPInMPlXY
2.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Qkpj8JFV-FU
3.http://www.youtube.com/watch?feature=player_embedded&v=pWK1VMmnsBo
Thanks : thewayofsalvation
No comments:
Post a Comment