வெளிப்படுத்தின
விசேஷம் 21:5 சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்
இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர் இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர் இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
ஏசாயா
43:19 இதோ, நான் புதிய காரியத்தைச்
செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள்
அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும்,
அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
2 கொரிந்தியா;
5:17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
சங்கீதம்
51:10 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே
சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே
புதுப்பியும்.
எசேக்கியேல்
11:19 அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து,
என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு
ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில்
புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான
இருதயத்தை அவா;கள் மாம்சத்திலிருந்து
எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு
அருளுவேன்.
எபேசியா;
4:23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
எபேசியா;
4:24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
ஏசாயா
62:2 ஜாதிகள் உன் நீதியையும், சகல
ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்;
கார்த்தருடைய வாய் சொல்லும் புது
நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்.
ஏசாயா
40:31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள்
ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
வெளிப்படுத்தின
விசேஷம் 3:12 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய
ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை;
என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற
புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின்
நாமத்தையும், என் புதிய நாமத்தையும்
அவன்மேல் எழுதுவேன்.
கொலோசெயா;
3:10 தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட
புதிய மனுஷனைத் தாpத்துக்கொண்டிருக்கிறீh;களே.
No comments:
Post a Comment