டிசம்பர் 2012 ல் உலகம் அழியபோகிறது என்று பரபரப்பாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. அது உண்மை உண்மையா? என்றால் இல்லை. இதை குறித்து இந்த கட்டுரை தெளிவாக விளக்குகிறது.
வரும் 2012-ஆம்
ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துபோக அதிக வாய்ப்புகள்
இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.
மாயன் காலண்டர், எகிப்து பிரமிடின் அமைப்பு, பூமியின் சுழலில் ஏற்படப்போகும் மாற்றம், எதிர்பார்க்கப்படும்
படுபயங்கர சூரியப் புயல் இப்படி பல காரணங்களை அட்டவணை படுத்திக் கொண்டே
போயிருக்கிறார்கள். இன்றைய நிலவரப்படி இது போன்ற டூம்ஸ்டே கதைகளுக்கு
மக்களிடையே அதிக கிராக்கி உண்டு. இத்தகைய கதைகள் சீக்கிரமாக சூடுபிடித்து
ஜனங்களிடையே பிரபலமாகின்றன. TEOTWAWKI என புதிதாக ஒரு சொல்லையே உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதன் விரிவாக்கம் The End Of The World As We Know It என்பதாம்.
இந்த டியோடுவாக்கியை சார்ந்து உருவாக்கப்படும் ஹாலிவுட் சினிமாக்கள்
எப்போதுமே ஃபாக்ஸ்ஆபீஸ் ஹிட்டாக தவறுவதில்லை. இதனால் வேதாகமம் அல்லாத பிற
பிரபல தீர்க்கதரிசனங்களும் ஆராயப்படுகின்றன. நாஸ்ட்ராமஸ், எட்வர்ட் கேய்ஸ், போப் மாலக்கியின் தரிசனங்கள், இஸ்லாமிய
புகாரி நூல் என பல சுவாரஸ்ய மூலங்கள் இவர்களுக்கு கிடைத்திருக்கின்றன.
இதனால் உலகின் முடிவு என்னமாயிருக்கும் என்னென்ன சம்பவங்கள் நடக்கலாம்
ஓருலக அரசாங்கம், ஓருலக கரன்சி, அர்மெகெதோன், வெளியுலக ஜீவராசிகளின் படையெடுப்பு, ரோபாட்டுகளின் மாயாஜாலங்கள் என முன்பு பேசப்படாத பல விசயங்கள் இன்று பரவலாக பேசப்படுகின்றன.
பிசாசானவனுக்கு
நம்மை விட வேதாகமம் அதிகமாய் தெரியும். இதனால் இறுதிக் காலங்களுக்கென
மக்களை இப்போதே தயாராக்கத் தொடங்கிவிட்டான்.வேதாகம
தீர்க்கதரிசனங்களுக்கொத்த எதிர்தீர்க்கதரிசனங்களை அவன் உருவாக்கி அதன்
மூலம் மக்களின் இருதயங்களை கடினப்படுத்துவதோடு வரவிருக்கும் அசாதாரணமான
நிகழ்வுகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் மக்களை இப்போதிருந்தே அவன்
பயிற்றுவிக்க தொடங்கிவிட்டான்.
அணுவுலை
ஒன்றின் அருகாமையிலுள்ள் மக்கள் வசிக்கும் பகுதி அது. கொடுக்கப்பட்டுள்ள
அறிவுரைப்படி எப்போதெல்லாம் அணுவுலை வளாகத்திலிருந்து அபாயசங்கு ஒலிக்கிறதோ
அப்போதெல்லாம் மக்கள் ஓடி தங்கள் தங்கள் வீடுகளுக்குள் போய் மறைந்துகொள்ள
வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை அந்த அபாயசங்கு பயங்கரமாக ஒலியெழுப்பியது.
யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தெருவில் அவரவர் அவரவர் வேலையை
பார்த்துக்கொண்டிருந்தார்கள். நல்லவேளையாய் அது தவறுதலாக ஒலித்த ஒரு சங்காக
அமைந்தது. மத்தேயு 24:38,39-ல் சொல்லியிருக்கிறபடி வாரிக்கொண்டு போகுமட்டும் அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. ”எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”
மேலே
நாம் சொன்ன பிரபல தீர்க்கதரிசனங்களுக்கும் வேதாக தீர்க்கத்
தரிசனங்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அந்த மனித தீர்க்கதரிசனங்கள்
சென்னை வானிலை அறிக்கை போல நடந்தாலும் நடக்கலாம் நடக்காமலும் போகலாம்.
ஆனால் வேதாகமத்திலிருக்கும் கர்த்தரின் வார்த்தைகள் அப்படி அல்ல. அச்சு
அசலால் அப்படியே நடந்தே தீரும். யாரும் அதை மாற்றமுடியாது.”அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்” என்கிறார் கர்த்தர். இதன் மூலம் அவர் சொல்லவருவது ”நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை.” அப்படியாவது அவரது தீர்க்கதரிசன நிறைவேறுதல்களையாவது நாம் கண்டு நாம் அவரை யார்யென அறிந்துகொள்வது நலமாயிருக்கும். (ஏசாயா:46:9.10)
2012-ல் உலகம் அழியுமா? என்றால்
சான்ஸே இல்லை என்பது தான் நம் வேதம் சொல்லும் பதில். இந்த பூமிக்கு
குறைந்தது இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகளாவது ஆயுசு இருக்கிறது. ஏனெனில் இதே
பூமியில்தான் இயேசு கிறிஸ்து மீண்டும் வந்து ஆயிரம்வருடம் அரசாளுகையை
செய்யவேண்டும்.அதனால் இந்த பூமிக்கு ஒன்றும் நேரிடாது. ஆனாலும் மனித
இனத்தின் அழிவு வேண்டுமானால் மிக அதிகமாக இங்கு சீக்கிரத்தில் இருக்கலாம்.
ஏசாயா:24:3 சொல்கிறது தேசம் முழுதும் கொள்ளையாகி முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை.
எப்போது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வருவார்?
ஒரு ரகசியத்தை பவுல் சொல்லிச்சென்றார். ரோமர்:11:25 சொல்கிறது ”மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.” ஆக
எப்போது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வருவாரென்றால் புறஜாதியாருடைய நிறைவு
உண்டாகும் போது அவர் வருவார். அதாவது இயேசு கிறிஸ்து ஒரு தொகையை
வைத்திருக்கிறார் போலிருக்கிறது. அந்த தொகை மனிதர்கள் கிறிஸ்துவண்டை
வரவேண்டும். அந்த கடைசி புறஜாதியான் கிறிஸ்துவண்டை வரும் வரை அவர் வாசலின்
அருகே காத்துக்கொண்டே நிற்பார் என்பது தான் வேதம் நமக்கு சொல்லும் உண்மை.
அந்த கடைசி மனிதன் கடவுளிடம் வந்ததும் ஆகா எல்லாமே மாறிப்போகும். ஆமென்
கர்த்தாவே வாரும்!
நன்றி : http://www.thewayofsalvation.org/
உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment